கிளிநொச்சியில் 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைது!
Courtesy: Subramaniyam Thevanthan
கிளிநொச்சி- புளியம்பொக்கனை பகுதியில் 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் (16) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் கிளிநொச்சி பொலிஸாரும், தர்மபுரம் பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, புளியம்பொக்கனை கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகித்து பளை பகுதியைச் சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புளியம்பொக்கனை நாகேந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரது வீட்டை வாடகைக்கு பெற்று அங்கிருந்து கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தடையப் பொருட்கள் அனைத்தும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
