முல்லைத்தீவு கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது
முல்லைத்தீவில் குடும்பஸ்தர் ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு - சிலாவத்தையில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, உடைமைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட இருவர் நேற்றைய தினம்(12.09.2023) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி அதிகாலை வீடொன்றுக்குள் நுழைந்த இரண்டு கொள்ளையர்கள் வீட்டிலிருந்த மூவர் மீது தாக்குதல் நடத்தி பணம் மற்றும் 10 பவுண் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில் அவர்களை தடுக்க முயன்ற 63 வயதுடைய வீட்டின் உரிமையாளர் கொள்ளையர்களால் தலையில் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவரே நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளினை சேர்ந்த 27, 26 வயதுடையவர்கள் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேவேளை இருவரில் ஒருவர் நேற்றையதினம் முல்லைத்தீவு நிதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு 21 ஆம் திகதிவரை தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய நபர் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கோட்டாபய ஜனாதிபதியாவாரென சஹ்ரானுக்கு தெரியாது: தெரிந்திருந்தால் இதுவே நடந்திருக்கும் - சுனில் ஹந்துனெத்தி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |