குடியகல்வு திணைக்களத்தின் இரு அதிகாரிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது
பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு கடவுச்சீட்டு வழங்கிய இணையவழி குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் இரு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதாள உலகக் குற்றவாளிகளான 'ஹீனடியன மகேஸ் மற்றும் 'மத்துகம சான்' எனப்படும் சான் அரோஸ் லியனகே ஆகியயோருக்கு கடவுச்சீட்டு வழங்கியதாக கூறப்படும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் மற்றும் முன்னாள் பிரதிக் கட்டுப்பாட்டாளர் ஆகியோரே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றில் முன்னிலை
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் வவுனியா நீதவான் நீதிமன்றிலும் மற்றைய சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றத்திலும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
84 நாட்கள் பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக கனி வாங்கிய சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri