இலங்கை நீதிச் சேவை சங்கம் அதிருப்தி! ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டு கடிதம்
மேல் நீதிமன்றத்திற்கு வழங்கப்படவுள்ள உடனடி நியமனங்களுக்கு முன்மொழியப்பட்ட சில பெயர்கள் குறித்து இலங்கை நீதிச் சேவை சங்கம் தமது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
தற்போது நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாக கடமையாற்றும் டிக்கிரி ஜயதிலக்க மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த மற்றுமொரு அதிகாரியின் பெயர்கள் குறித்த நான்கு பெயர்களில் உள்ளடங்கியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிய முறைப்பாட்டுக் கடிதத்தில் இலங்கை நீதிச்சேவை சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயம்
ஜயதிலக்க இதற்கு முன்னர் 2016ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் உதவி செயலாளராக பதவி ஏற்கும் வரை, நீதிவானாக பதவி வகித்திருந்தார்.
சட்டப்பூர்வமற்ற நிறுவனத்திற்கு அவர் நியமிக்கப்பட்டநிலையில், எதிர்காலத்தில் எந்த நிலையிலும் நீதித்துறையின் உறுப்பினராக மீண்டும் சேர்த்துக் கொள்ள தகுதியற்றவர் என்றே தாம் கருதுவதாக நீதிச்சேவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரியின் நியமனத்தை
பார்க்கும் போது, நீதித்துறை சீரேஸ்ட நிலையில் உள்ளவர்களை காட்டிலும் அவர்
மிகவும் இளைய அதிகாரி என்று நீதிச்சேவை சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
