திருகோணமலையில் மற்றுமொரு விபத்து: தம்பதி உட்பட நால்வர் வைத்தியசாலையில்..
திருகோணமலையில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று(15.02.2026) மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியின் காயங்கேணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பல வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான பணம்: இலங்கைக்கு வந்துள்ள பெருமளவு தங்க பிஸ்கட் - அம்பலமான விடயம்
விபத்து
திருகோணமலையிலிருந்து ஏறாவூர் நோக்கி ஒரே திசையில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளுடன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும், மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த மேலும் இருவரும் என மொத்தம் நால்வர் காயமடைந்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதன்போது, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் , சம்பவ இடத்தில் காயப்பட்டவர்களுக்கு உதவி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த நால்வரும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதுடன், அவர்களின் உயிருக்கு ஆபத்தில்லை என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரே திசையில் சென்ற வாகனங்கள் மோதிக்கொண்டமை தொடர்பில் வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வாகனங்களுக்கு இடையிலான போதிய இடைவெளி பேணப்படாமையே விபத்துக்குக் காரணம் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam