பருத்தித்துறையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி
பருத்தித்துறையில் மேலும் இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மேல் மாகாணத்திலிருந்து வந்த இருவருக்கே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டம், வத்தளையிலிருந்து சொந்த வீட்டுக்கு வந்திருந்த தாயும், மகளும் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் பெறப்பட்டிருந்த உயிரியல் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களுடன் சேர்த்து வடக்கு மாகாணத்தில் இன்று 9 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். கொரோனா ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளின் போதே 9 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
