இலங்கையில் மேலும் இரண்டு பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்!
குருணாகல் மாவட்டத்தின் நிராவிய மற்றும் நிகதலுபொத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், தற்போது குறித்த இரண்டு கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் குளியாப்பிட்டிய நகரம், துன்மோதர, மேற்கு தண்டகமுவ, கணதுல்ல, பஹல வீரம்புவ ஆகிய 5 பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த பகுதிகளில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததை அடுத்து இவ்வாறு அந்த பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan