யாழில் மேலும் இருவர் கோவிட் தொற்றுக்கு பலி!
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் கோவிட் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று அதிகாலை வீட்டில் உயிரிழந்துள்ளார்.
அவரது உயிரிழப்புத் தொடர்பில் கேள்வியுற்ற பொதுச் சுகாதாரப் பரிசோதகர் நேற்றுக் காலை அங்கு சென்றுள்ளார்.
சந்தேகம் கொண்டு உயிரிழந்தவரின் சடலத்தை பி.சி.ஆர் பரிசோதனைக்கு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்ததுடன் வீட்டிலிருந்தவர்களிடம் மாதிரிகளைப் பெற்றனர்.
அதன் பரிசோதனை முடிவுகளில் உயிரிழந்தவர் மற்றும் அவரது குடும்பத்தில் மூவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனால் நேற்றுக்காலை இறுதிச் சடங்குக்குச் சென்றவர்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு உயிரிழந்தவரின் சடலம் சுகாதார விதிகளுக்கு அமைய மின் தகனம் செய்யப்படவுள்ளது





ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri
