யாழில் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தர்: மேலும் இருவர் கைது
யாழ்ப்பாணம்- சுன்னாகம் பகுதியில் 54 வயதுடைய நபர் ஒருவரை அடித்துகொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 வயது யுவதியும் 54 வயது ஆணொருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறவினர்கள் உறுதியளித்து கிராமத்திற்கு வரவழைக்கப்பட்டு கிராம மக்களால் நையப்புடைக்கப்பட்டு தாக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது பலத்த காயங்களுக்குள்ளான குறித்த ஆண் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.

யுவதியின் வாக்குமூலம்
இந்த சம்பவம் தொடர்பில் நேற்றுமுன்தினம் (07.08.2023) சுன்னாகம் பொலிஸாரால் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது சந்தேகநபர்களை எதிர்வரும் (22.08.2023)ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இதேவேளை தாக்குதலுக்கு உள்ளான யுவதி தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் யுவதியின் தந்தை நேற்றையதினம் (08.08.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் தடயச்சான்றான, உயிரிழந்த நபரின் அங்கியை எரித்த குற்றச்சாட்டின் கீழ் யுவதியின் சகோதரரையும் நேற்றையதினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் சம்பவம் நிகழ்ந்த இடத்தினை மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிவான்
பார்வையிட்டதையடுத்து உயிரிழந்தவரது சடலமானது பிரேத
பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரை தொடர்ந்து சூரியுடன் இணையும் இளம் சென்சேஷனல் நடிகை..? யார் தெரியுமா? Cineulagam