கடற்றொழிலுக்கு சென்று மாயமான இருவர் பாதுகாப்பாக மீட்பு
முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்று காணாமல்போயிருந்த இரண்டு கடற்றொழிலாளர்கள் கரை திரும்பியுள்ளார்.
நேற்று முன்தினம் 02.05.2026 காலை பத்து மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் தொழிலுக்காகச் சென்ற குறித்த இரு கடற்றொழிலாளர்களும், நேற்று (03) அதிகாலை வரை கரை திரும்பாத நிலையில் உறவினர்கள் படகுகளில் சென்று தேடியுள்ளனர்.
தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும்..! 10 தொகுதிகளின் நிலவரம் - இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு
பாதுகாப்பாக மீட்பு
இதன்போது அவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்காத நிலையில், காணாமல்போனவர்களையும் அவர்களது படகினையும் தேடும் நோக்கில், முல்லைத்தீவு கடற்பரப்பில் இன்று (04) காலை மீனவர்கள் பல படகுகளில் சென்று மீண்டும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்த நிலையில் அவர்களை கடற்றொழிலாளர்கள் சிலர் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026