இரண்டு மில்லியன் கனமீட்டர் கடல் மணலை அகழ்ந்தெடுக்க எதிர்பார்ப்பு
இவ்வருடம் இரண்டு மில்லியன் கனமீட்டர் கடல் மணலை அகழ்ந்தெடுக்க எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கழுவி சுத்திகரிக்கப்பட்ட கடல் மணலை பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு ஆலோசனை வழங்கியதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடல் மணல் அகழ்வுத் திட்டம்
இந்த கடல் மணல் அகழ்வுத் திட்டத்தினால் கொழும்பு தொடக்கம் நீர்கொழும்பு வரையான கடற் கரையோரப் பகுதிகளில் வாழும் மீனவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே பாதிப்புக்குள்ளாகும் மீனவ சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அந்த மீன்பிடி பகுதிகளில் உள்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பில் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொள்ளுமாறும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தியுள்ளார்.
குறைந்த விலையில் விற்பனை
முத்துராஜவெல கடற்கரையிலிருந்து நீர்கொழும்பு வரை 10-15 கிலோமீட்டர் தூரத்தில் கடலில் இருந்து நிலத்திற்கு கடல் மணல் அள்ளப்படுகிறது.
கடலில் இருந்து பம்ப் செய்யப்படும் மணலை நிலத்திற்கு கொண்டு வந்து, மணல் மேடாக திறந்த வெளியில் சேமித்து, இயந்திரத்தில் மணலை செலுத்தி, கழுவி, சுத்தம் செய்து, தேர்வு செய்து உலர்த்தும் பணி நடக்கிறது.
பொறியாளர்களின் மேற்பார்வையில் உவர்தன்மை இல்லாத கடல் மணலை கழுவி சுத்தம் செய்து உலர்த்தி தேவையான தரத்தில் தயார் செய்து அதன்பின்னர் கெரவலப்பிட்டி - முத்துராஜவெல மணல் விற்பனை நிலையத்தில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri

ரோலெக்ஸ் சூர்யாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு லியோ படத்தில் களமிறங்கும் கேமியோ.. யார் நடிக்கிறார் தெரியுமா Cineulagam

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri
