வவுனியாவில் பெண்ணொருவரின் சங்கிலியை அறுத்துக் கொண்டு இருவர் தப்பியோட்டம்
வவுனியா - பூந்தோட்டம் பகுதியில் வியாபார நிலையத்திற்கு சென்ற இருவர் குறித்த வியாபார நிலைய உரிமையாளரான பெண் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்று (24.02.2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் தப்பியோட்டம்
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த வியாபார நிலையத்திற்கு சென்ற இருவர் புகையிலை தருமாறு கூறியதுடன், குறித்த பெண் புகையிலையை கொண்டு நின்ற போது அவர் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |