பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதி விபத்து : இருவர் காயம்
கம்பளை - கண்டி பிரதான வீதி கெலிஒயா பகுதியில் பேருந்தொன்றும் வானொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்தானது, இன்று (24.02.2024) பேராதெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலிஓயா பெட்ரோல் நிரப்பு நிலையத்திற்கு முன்பாகவுள்ள வளைவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், அனுராபுரத்தில் இருந்து ஹட்டன் - சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகர்களை ஏற்றி வந்த பேருந்தும், புஸல்லாவைப் பகுதியில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த வானுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
சாரதி நித்திரைக் கலக்கம்
மேலும், வானின் சாரதி நித்திரைக் கலக்கத்தில் இருந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதன்போது, பேருந்தில் பயணித்த ஒருவருக்கும், வானில் பயணித்த ஒருவருக்கும் மட்டும் சிறு காயங்கள் ஏற்ப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பேராதெனிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
