ஐ.மக்கள் சக்தி கூட்டணியில் போட்டியிடும் மலையகத்தின் இரண்டு முக்கிய கட்சிகள்
மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் என்பன உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் பொறுப்பு அந்த தொகுதிகளில் இருக்கும் கட்சியின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கட்சியின் உறுப்பினர்கள் தெரிவு செய்யும் வேட்பாளர்கள் தொடர்பில் மலையக மக்கள் முன்னணியும், தொழிலாளர் தேசிய முன்னணியும் எதிர்வரும் 14 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானத்தை எடுக்கும். இதன் பின்னர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் எனவும் பழனி திகாம்பரம் மேலும் கூறியுள்ளார்.





மளிகைப் பொருட்கள் முதல் விலையுயர்ந்த கார்கள் வரை.., ஜிஎஸ்டி மாற்றத்தால் விலை குறையும் பொருட்கள் News Lankasri

23 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை!! யார் தெரியுமா? Cineulagam
