சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளாக நடித்த இலங்கையர் இருவர் கைது
சென்னை விமான நிலையத்தில் தம்மை சுங்க அதிகாரிகளாக அடையாளப்படுத்தி இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரண்டு இலங்கை பிரஜைகளை சென்னை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கையிலிருந்து கடந்த திங்கட்கிழமை சென்ற 47 வயதான பெண் ஒருவரே இந்த பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளார்.
சுங்க அதிகாரிகளாக நடித்த இலங்கையர்கள்
குறித்த பெண் சென்னை விமான நிலையத்தினை சென்றடைந்த உடன் 31 மற்றும் 40 வயதுடைய இரு இலங்கையர்கள் தங்களை சுங்க அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி நகைகளை எடுத்துச் செல்வதாக கூறி, நகை மற்றும் வளையல்களை இருவரும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது சந்தேகமடைந்த பெண் சுங்கத்துறைக்கு சென்று அவர்கள் மீது புகார் அளித்த நிலையில், இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

கேம் சேஞ்சர் ஓடாதுனு முன்பே தெரியும்.. மிகப்பெரிய நஷ்டம்: ஷங்கரை தாக்கிய தயாரிப்பாளர் தில் ராஜு Cineulagam
