மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 28 கோவிட் தொற்றாளர்கள் பதிவு - வைத்தியர் மயூரன்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இரண்டு தினங்களில் இரண்டு இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரி அலுலகம் ஊடாக 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 28 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், இருவர் மரணமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 7863 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 112 பேர் மரணமடைந்துள்ளதுடன் 6100 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.
கடந்த வாரம் 471 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 78000 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
அத்துடன் 60 வயதுக்கு மேற்பட்ட 90 வீதமானவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri