புத்தாண்டு தினத்தில் முல்லைத்தீவில் நடந்த துயரம்: இரண்டு இளைஞர்கள் பலி: ஆபத்தான நிலையில் ஒருவர்(Photo)
முல்லைத்தீவு - கேப்பாபுலவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கனரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இன்று (01)மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று இளைஞர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 48 அகவையுடைய பிலக்குடியிருப்பு கேப்பாபிலவினை சேர்ந்த கிருஸ்ணசாமி மாரிமுத்து, அதே இடத்தினை சேர்ந்த 17 அகவையுடைய சூரியகுமார் கரிதாஸ் என்பவர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் ஆனந்தபுரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 22 அகவையுடைய சண்முகம் நிறோஜன் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் குழப்ப நிலை தோன்றியுள்ளது. கிராம மக்கள் விபத்து இடம்பெற்ற வீதியில் ஒன்றுகூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
