சிக்கிய நிரஞ்சலா குடும்பம்! கதி கலங்கும் NPP! - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தேசிய மக்கள் சக்தியின் பேலியகொட நகர சபை உறுப்பினர் ஒருவரது கணவர் மற்றும் மகன் ஆகியோர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டமை தென்னிலங்கை ஊடகங்களில் பேசுபொருளாக மாறியிருந்தது.
இந்நிலையில், டிஸ்னா நிரஞ்சலா குமாரி தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.
இதனால், தான் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் தனது குடும்பம் இவ்வாறான மோசமான நடவடிக்கையில் ஈடுபடும் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.
மேலும், தான் கொழும்பில் வசித்து வருவதாகவும் கணவரும் மகனும் அநுராதபுரத்தில் வசித்து வருவதாகவும் இதனால் அவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள் என தனக்கு தெரியாமல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட அவரது கணவர் மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் தலைவராகவும் செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |