இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு
இரு வேறு விபத்துக்களில் இருவர் மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
புத்தளத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று ரயில் வீதியில் மூடப்பட்டிருந்த வாயிற்கதவில் மோதுண்டு வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் சிலாபம் வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது மரணமடைந்துள்ளார்.
இதேவேளை, குருநாகலில் வானொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் பாதசாரி உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி, வாரியபொல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்படும்போது மரணமடைந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இரு விபத்துக்களிலும் மரணமடைந்தவர்களின் பெயர் விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
விபத்துக்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
