சீரற்ற காலநிலையால் இருவர் மரணம்! - 11,737 பேர் பாதிப்பு
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் 2 ஆயிரத்து 894 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, பலத்த மழை மற்றும் மண் சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர் என்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கண்டியைச் சேர்ந்த 76 வயது நபர் ஒருவரும், கடுவெலயைச் சேர்ந்த 55 வயது நபர் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நுவரெலியா, கண்டி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் சீரற்ற காலநிலை காரணமாக அதிகம் பதிக்கப்பட்டுள்ளன.
குறித்த மாவட்டங்களில் 327 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள நிலையில், 63 குடுப்பங்களைச் சேர்ந்த 280 பேர் பதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 38 நிமிடங்கள் முன்

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
