கிளிநொச்சியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம்
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றுமுன்தினம்(4)பூநகரி பகுதியில் கடமையில் இருந்த பொழுது கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு குறித்த பொலிஸ் அதிகாரிகள் இலஞ்சம் பெறுவதாக முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இரண்டுபொலிஸ் உத்தியோகத்தர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்திய பொழுது அவர்கள்அன்று கடமைக்குச் செல்லும் பொழுது 2000 ரூபாய் பணம் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் பரிசோதனையின் போது மொத்தமாக 7040 பணம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பணியிடை நீக்கம்
இந்தநிலையில், 5040பணம் மேலதிகமா இருந்தமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 13 மணி நேரம் முன்

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

619 விக்கெட் வீழ்த்திய ஜாம்பவானின் சாதனையை முறியடித்த ஜடேஜா! சச்சின், கோஹ்லியும் கூட இல்லை News Lankasri
