ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருந்த மேலும் 2 இஸ்ரேலியர்கள் விடுவிப்பு
இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட 210 பேரில் இருவரை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதன் பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்த ஹமாஸ் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.
Two elderly Israeli hostages were released by Hamas on health grounds. They were freed following the release of an American woman and her daughter on Friday. All four were among more than 200 people Hamas gunmen took hostage this month https://t.co/4DibW5uDuS pic.twitter.com/5BMQLssfgH
— Reuters (@Reuters) October 24, 2023
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்
இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு எதிராக ஹமாஸ் அமைப்பின் எல்லைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி 18-வது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து வரும் நிலையில் பணய கைதிகளை மீட்கும் முயற்சி தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருந்த மேலும் 2 பணய கைதிகளை அந்த அமைப்பு விடுவித்துள்ளது.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பு அறிவித்துள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
