திருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம் (Photos)
திருகோணமலை - பன்குளம் பகுதியில் கெப் ரக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (18.09.2023) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை – அனுராதபுரம் ஏ12 வீதியினூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் பன்குளம் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.
பாதையை விட்டு விலகி விபத்து
குறித்த இருவரும் வேலையின் நிமிர்த்தம் அம்பாறை – காரைதீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கையில் சாரதியின் தூக்கம் காரணமாக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கும்புறுப்பிட்டி
அத்துடன் நேற்றிரவு (17.09.2023) திருகோணமலை - கும்புறுப்பிட்டியில் வைத்து வீதியால் பயணித்த ஒருவர் டிமோ பட்டா வாகனத்தினால் தாக்கப்பட்டு விபத்துக்குள்ளாகியிருந்தார்.

இந்நிலையில் குறித்த நபர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவர் திருகோணமலை கும்புறுப்பிட்டி 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த எஸ். பொற்செல்வன் (வயது 47) என தெரிய வருகின்றது.
பொலிஸாரின் முன்னிலையில் கஜேந்திரன் மீதான தாக்குதல்: சுமந்திரன் விடுத்துள்ள வேண்டுகோள் - செய்திகளின் தொகுப்பு (Video)
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri