கிளிநொச்சியில் இராணுவத்தினரால் கையளிக்கப்பட்ட இரு வீடுகள்
கிளிநொச்சி பரந்தன் மற்றும் பன்னங்கண்டி ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இரு வீடுகள் அதன் பயனாளிகளிடம் இன்று (16) கையளிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் சிவபுரம் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட, வருமானம் குறைந்த 05 பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடு அதன் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.
வீட்டின் பயனாளிகள்
அதனை தொடர்ந்து கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி கிராமத்தில் இராணுவத்தில் பணியாற்றும் கணவன் மனைவி மற்றும் அவர்களுடன் சேர்ந்து வாழும் மாற்றுத்திறனாளியான தாய் தந்தையரை உள்ளடக்கிய குடும்பத்துக்கு குறித்த வீடு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வுகளில் இராணுவ உயரதிகாரிகள், இராணுவ பதவி நிலை உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள், வீட்டின் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்-
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு - க்வார் அணையை முடிக்க இந்தியா ரூ.3,119 கோடி கடன் பெற முடிவு News Lankasri

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
