வவுனியாவில் இரு கனரக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: ஒருவர் படுகாயம்(Photos)
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஏ9 வீதியில் இரு கனரக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (01.02) மாலை இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா- ஹொரவப்பொத்தானை வீதியூடாக ஓமந்தை பகுதி நோக்கி கனரக பயணித்துக் கொண்டிருந்த போது மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கனரக வாகனத்தினை சாரதி திடீரென பிரேக் பிடித்துள்ளார்.
இதன்போது, கனரக வாகனத்திற்குப் பின்பக்கமாக வந்து கொண்டிருந்த மற்றுமொரு கனரக வாகனம் குறித்த கனரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதுடன், வீதிக்கு அருகே நின்ற மோட்டார் சைக்கிளும் கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் நின்ற ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பின்பக்கமாக வந்த கனரக மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam
