மன்னார் கடலில் இரு படகுகள் மோதி விபத்து! ஒருவர் பலி
மன்னார் கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் கடற்றொழிலார் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(15.4.2026) இடம்பெற்றுள்ளது.
இரண்டு கடற்றொழில் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னார் வங்காலைப்பாடு கடல் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு படகுகள் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வங்காலைப்பாடு பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவரின் படகும் காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவரின் படகுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின் போது படகுகள் இரண்டும் பலத்த சேதமடைந்த நிலையில் படகில் இருந்த கடற்றொழிலாளர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டனர்.
தீவிர விசாரணை
விபத்தின் பின்னர் ஒரு கடற்றொழிலாளர் கடலில் காணாமல் போயிருந்தார். சக கடற்றொழிலாளர்க் நீண்ட நேரம் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் பலனாக ஒரு கடற்றொழிலாளர் சடலமாக மீட்கப்பட்டார்.
உயிரிழந்தவர் காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவரது உடல் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த விபத்தில் காயமடைந்த வங்காலைப்பாடு பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு கடற்றொழிலாளர் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
விபத்துக்கான காரணம் மற்றும் மேலதிக விபரங்கள் தொடர்பில் அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri