முல்லைத்தீவு கடலில் உயிருடன் மீட்கப்பட்ட இரு கடற்றொழிலாளர்கள் - விசாரணையில் வெளியான தகவல்
முல்லைத்தீவு கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்றிருந்த இரண்டு கடற்றொழிலாளர்கள் நடுக்கடலில் தத்தளித்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (04.05.2026) இடம்பெற்றுள்ளது.
கடந்த 02.05.2026 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்றிருந்த கள்ளப்பாடு தெற்கு கண்ணகை அம்மன் சங்கத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள், இரண்டு நாட்களாக காணாமல் போனதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
நடுக்கடலில் இருந்து மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்கள்
இதனையடுத்து, அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில், இன்று (04) காலை முதல் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு கடற்றொழிலாளர்களும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட இருவரும் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே அவர்கள் கடலில் சிக்கியிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026