கடலில் முழ்கிய இரு மீனவர்கள்! (Video)
காத்தான்குடி கடலில் நேற்று (30) காலை மீன் பிடிக்கச் சென்ற சிறிய மீன்படி படகு ஒன்று கடலில் மூழ்கியதில் அதில் சென்ற இரு மீனவர்களும் உயிர் தப்பிய நிலையில் கரையை வந்தடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த இரு மீனவர்களும் காலை 6 மணிக்கு காத்தான்குடி ஏத்துக்கால் கடலுக்கு சிறிய மின்பிடி படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
இதன் போது கடலில் சுழல் காற்று ஒன்று திடீரென வீசியதால் அந்த மீன்பிடி படகு கவிழ்ந்த நிலையில், அதில் சென்ற இரு மீனவர்களும் கடலில் மூழ்கிய நிலையில் அம் மீன்பிடி படகில் தொங்கிக் கொண்டிருந்துள்ளனர்.
இதனை அறிந்த கரையில் நின்ற மீனவர்கள் மீன்பிடி படகொன்றில் கடலுக்கு சென்று குறித்த இரு மீனவர்களையும் காப்பாற்றிக் கொண்டு கரைக்கு வந்து சேர்ந்தாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடலில் மூழ்கிய சிறிய மீன்பிடி படகை எடுப்பதற்கு முயறச்சிகளை மேற் கொண்டுவருவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.




தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam