மட்டக்களப்பில் கனடா மற்றும் ஓமான் நாட்டிற்கு அனுப்புவதாக மோசடி
மட்டக்களப்பில் கனடா மற்றும் ஓமான் நாட்டிற்கு அனுப்புவதாக தெரிவித்து இருவரிடம் 28 இலட்சம் ரூபாவினை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட கொழும்பு மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இரு போலி முகவர்கள் கைதாகியுள்ளனர்.
இவர்களை நேற்று (17.07.2023) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
கனடாவிற்கு அனுப்புவதாக கொழும்பிலுள்ள போலி முகவர் ஒருவர் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவரிடம் 15 இலச்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு அவரை கடந்த 6 மாதகாலமாக ஏமாற்றி மோசடி செய்து வந்த நிலையில் அந்த போலி முகவருக்கு எதிராக விசேட குற்ற விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்ததையடுத்து போலி முகவரை கொழும்பில் வைத்து நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
அதேவேளை ஓமான் நாட்டிற்கு வேலை பெற்று தருவதாக ஒருவரிடம் சின்ன ஊறணியைச் சேர்ந்த போலி முகவர் ஒருவர் 13 இலச்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு ஏமாற்றி வந்த நிலையில்; பாதிக்கப்பட்டவர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய போலி முகவரை கைது செய்தனர்.
இந்த இரு வெவ்வேறு சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் இன்று முன்னிலைபடுத்தப்பட்ட போது இருவரும் வாங்கிய பணத்தை திருப்பி கொடுப்பதாக தெரிவித்த நிலையில் அவர்களை தாலா ஒருவருக்கு இரு ஆள் பிணை நிபந்தனையில் நீதவான் விடுவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
