நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட ஹெலிகொப்டர்கள்.. வெளிநாடொன்றில் பயங்கர விபத்து
கிரீஸில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு ஹெலிகொப்டர்கள் வான்வெளியில் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதில் ஒரு ஹெலிகொப்டர் தரையில் விழுந்து நொறுங்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கடுமையான வெப்ப அலை மற்றும் போதிய மழையின்மை காரணமாக இந்த கோடைகாலத்தில் ஐரோப்பாவின் பல பகுதிகள் காட்டுத் தீயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதுடன், காலநிலை மாற்றமே இந்த நிலையை தீவிரப்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பயங்கர காட்டுத்தீ
ஏதென்ஸுக்கு மேற்கே உள்ள சதா (Psatha) பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்துக்கு பிறகு, நான்கு பணியாளர்கள் மீட்கப்பட்டதாக கிரீஸ் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான ஒரு ஹெலிகொப்டரில் இருந்த கிரீஸ் மற்றும் டேனிஷ் நாட்டவர் ஆகிய இரு பணியாளர்களும் உயிரிழந்த அதேவேளை, இரண்டாவது ஹெலிகொப்டரில் இருந்த பிரித்தானிய மற்றும் கிரீஸ் நாட்டவர் ஆகிய இரு பணியாளர்களும் உயிருடன் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
🔴 Two Bell 214ST firefighting helicopters collided mid-air while battling a major forest fire in the Psatha area, west of Athens, Greece, triggering a search and rescue operation.
— FL360aero (@fl360aero) August 2, 2026
✈️ Aircraft involved: One helicopter was Bell 214ST N511EV (serial 28105, built in 1982), while… pic.twitter.com/Jwd3qpLAfj
ஹெலிகொப்டரின் சுழலிறகுகள் (rotors) மோதியதைத் தொடர்ந்து, ஒரு ஹெலிகொப்டர் வெடித்துச் சிதறி தீப்பிடித்தவாறு தரையில் விழுந்த காட்சி தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியாகியுள்ளதுடன், மோதலுக்கான காரணம் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் படை குறிப்பிட்டுள்ளது.