மகாவலி ஆற்றில் மூழ்கிக் காணாமல் போன இரண்டு இளைஞர்களின் சடலங்களும் மீட்பு
பொல்கொல்லை நீர்த்தேக்கத்துக்குக் கீழ் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற வேளையில் காணாமல்போன இரண்டு இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த புதன்கிழமை (25.09.2024) மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற ஐந்து இளைஞர்களில் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.
அதனையடுத்து, மேற்படி இருவரையும் தேடும் பணியில் வத்துகாமம் பொலிஸார் மற்றும் கடற்படை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
பிரேத பரிசோதனை
இந்நிலையில், காணாமல்போன இருவரில் ஒருவரது சடலம் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், நேற்று வெள்ளிக்கிழமை காலை மற்றைய இளைஞரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இரண்டு இளைஞர்களும் 19 மற்றும் 20 வயதுடைய வத்துகாமம் - குன்னேபான பிரதேசத்தில் வசிப்பவர்கள் ஆவர்.
உயிரிழந்தவர்களது சடலங்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கண்டி தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
