வவுனியாவில் இரண்டு தம்பதியினர் கைது!
வாகனம் ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த கணவன், மனைவி என இரு தம்பதிகளான நான்குபேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வவுனியா மதகுவைத்தகுளம் மற்றும் மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் வசித்து வரும் தம்பதியினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப்பயணித்த காரை வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் கடமையில் இருந்த பொலிஸார் வழிமறித்து சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த காரில் 63.84 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் இருந்தமை கண்டறியப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர்
சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri