இலங்கைக்கு செல்ல வேண்டாம்!! தமது நாட்டு பிரஜைகளை அறிவுறுத்திய மற்றொரு நாடு
அத்தியாவசிய காரணங்கள் இன்றி இலங்கைக்கு செல்வதைத் தவிர்க்குமாறு நியூஸிலாந்து தனது நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் பிரித்தானியாவும் தனது நாட்டுப் பிரஜைகளுக்கு, அத்தியாவசிய காரணங்கள் இன்றி இலங்கைக்கு செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியிருந்தது.
இலங்கையை ஆக்கிரமித்துள்ள நெருக்கடி நிலை
இலங்கையில் மருந்து, எரிவாயு, எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தமது பிரஜைகளுக்கு நியூஸிலாந்து சுட்டிக்காட்டியுள்ளது.
இதுதவிர இலங்கையில் மின்வெட்டு, போராட்டம், திடீர் சாலை மறியல், போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர இலங்கைக்கு செல்ல வேண்டாம் என பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் மேலும் அறிவித்துள்ளன.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
