மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்ற திருட்டு சம்பவங்கள்: சந்தேகநபர்களுக்கு பொலிஸார் வலைவீச்சு
மட்டக்களப்பு- வெல்லாவெளி பிரதேசத்தில் உள்ள இரண்டு பூட்டியிருந்த வீடுகளில் திருட்டு சம்பவம் பதிவாகியுள்ளதாக வெல்லாவெளி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த திருட்டு சம்பவங்களின்போது சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக இன்று (07.07.2023) தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை பிரதேசத்தில் நேற்று முன்தினம் (05.07.2023) வீட்டின் உரிமையாளர் தனது வீட்டிற்கு திரும்பிய நிலையிலேயே இந்த சம்பவம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தங்க ஆபரணங்கள் திருட்டு
இந்நிலையில் வீட்டின் கூரையை கழற்றி உள்நுழைந்த சந்தேகநபர் அங்கிருந்து கைசெயின், மோதிரம் 3 மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுமட்டுமன்றி வெல்லாவெனி கமலநசேவைகள் திணைக்களத்துக்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் நேற்றையதினம் (06.07.2023) 4 பவுண் கொண்ட தங்க ஆபரணம் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக தடவியல் பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |