மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர்களாக ஒரே நாளில் இருவர் பதவியேற்பு

Eastern Province Batticaloa Batticaloa Court Commissioners
By Independent Writer Dec 15, 2021 03:58 PM GMT
Report

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக ஒரே நாளில் காலையிலும்,மாலையிலும் இரு ஆணையாளர்கள் சம்பிரதாயபூர்வமாக இன்று(15) தமது பதவிகளை பொறுப்பேற்று கொண்டதையடுத்து ஒரே நாளில் இருவர் ஒரே பதவிக்கான கடமையை பொறுப்பேற்ற வரலாற்றுச் சாதனை இடம்பெற்றுள்ளது.

மாநகரசபை ஆணையாளராக் கடமையாற்றி வந்துள்ள எம்.தயாபரனுக்கு பதிலாக புதிய ஆணையாளராக பொறியியலாளர் ந.சிவலிங்கம் ஆணையாளராக கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டு அவர் இன்று காலையில் தனது கடமைகளை சம்பிராய பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனையடுத்து பிற்பகல் புதிய ஆணையாளராகக் கடமைகளை பொறுப்பேற்ற பொறியியலாளர்; ந.சிவலிங்கத்துக்கு பதிலாக மீண்டும் முன்னாள் ஆணையாளர் எம். தயாபரன் கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டு அவர் தமது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக எம்.தயாபரன் நியமிக்கப்பட்டு இரண்டு வருடங்களாக கடமையாற்றி வருகின்றார்.

இந்த நிலையில் மாநகரசபை முதல்வருக்கும் மாநகரசபை ஆணையாளர் தயாபரனுக்கும் இடையே மாநகரசபை செயற்பாட்டில் முரண்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து ஆணையாளருக்குச் சபையினால் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பல சபையினால் மீளப்பெறப்பட்டது.

அதனை தொடர்ந்து முதல்வருக்கும்,ஆணையாளருக்கும் இடையே தொடர்ந்த முறுகல் நிலையையடுத்து ஆணையாளருக்கு எதிராக மாநகரசபை முதல்வர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் தொடர்ந்த நிலையில் ஆணையாளருக்கு எதிராக நீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியிருந்தது.

தொடர்ந்து ஆணையாளர் நீதிமன்ற தடை உத்தரவை மீறிச் செயற்படுவதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை மாநகரசபை முதல்வர் மட்டக்களப்பு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த பொறியியலாளர் ந.சிவலிங்கம் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டதையடுத்து அவர் இன்று மாநகரசபை முதல்வர் ரி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன மற்றும் பிரதி ஆணையாளர் உ. சிவராயா மற்றும் மாநகரசபை உறுப்பினர் முன்பாக தமது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் பிற்பகல் புதிய ஆணையாளராகப் பதவி ஏற்றுக் கொண்டவருக்குப் பதிலாக மீண்டும் ஆணையாளராக எம்.தயாபரனைக் கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டதையடுத்து அவர் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US