தமிழர் பகுதியில் இரு ஆடை வர்த்தக நிலையங்களுக்கு இடையே கடும் மோதல்
மட்டக்களப்பு நகரில் வீதியால் செல்வோரை தமது கடைக்கு வாருங்கள் என ஏட்டிக்கு போட்டியாக கூப்பிட்டு வரும் இரு ஆடைகள் விற்பனை வர்த்த நிலையங்களில் ஊழியர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு உள்ளாகி 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை வியாழக்கிழமை (16) கைது செய்துள்ளதுடன் இருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஜே.கே. பாயின் நண்பரிடமிருந்து கசிந்த அதிர்ச்சியூட்டும் ஒலிப்பதிவு.. தக்ஸியின் முதல் கணவரும் சிறையில்!
ஊழியர்கள் கைது
கோட்டைமுனை பாலத்துக்கு அருகில் உள்ள அருகருகே அமைந்துள்ள இரு ஆடை விற்பனை வர்த்தக நிலையங்களில் முன்னால் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் வீதியால் போவோரை தனது கடைக்கு வருமாறு ஏட்டிக்கு போட்டியாக அழைத்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவ தினமான கடந்த புதன்கிழமை (15) பகல் வீதியால் சென்றவர்களை கூப்பிடும் போது இரு கடைகளில் பணிபுரிந்துவரும் ஊழியர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கைகலப்பு ஏற்பட்ட நிலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இதில் இரு பகுதியையும் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வியாழக்கிழமை ஒருவரை கைது செய்ததுடன் இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவரை நேற்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



