கிளிநொச்சியில் இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு
கிளிநொச்சி மாவட்ட வட்டக்கச்சி பிரதான வீதியின் கோவிந்தன் கடை சந்திப்பகுதிக்கு அண்மையில் உள்ள நீர்ப்பாசன கால்வாய் ஒன்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (14.01.2024) காலை இடம்பெற்றுள்ளது.
உடற்கூற்று பரிசோதனைகள்
இரு தலைக்கவசம் மற்றும் பாதணிகள் ஏற்கனவே கால்வாயில் பொலிஸாரால் மீட்கப்பட்ட நிலையில் தேடுதல் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

இச்சந்தர்ப்பத்திலேயே குறித்த சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், சடலங்கள் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு கிளிநொச்சி மாவட்ட நீதவான் ஜெமில் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் சடலம் குறித்த விசாரணைகளை கிளிநொச்சி மாவட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri