வவுனியாவில் இரு மோட்டார் சைக்கிள்கள் திருட்டு: மல்லாவி இளைஞன் கைது
வவுனியாவில் (Vavuniya) இரு மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மல்லாவி இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் நேற்று (08) தெரிவித்துள்ளனர்.
கடந்த 6ஆம் திகதி வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மேடாட்டர் சைக்கிள் ஒன்றை காணவில்லை என அதன் உரிமையாளர் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிஸார் முன்னெடுத்திருந்த விசாரணைகளின் போது மல்லாவியைச் சேர்ந்த 27 வயது இளைஞன் ஒருவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
மற்றுமொரு மோட்டார் சைக்கிள்
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கடந்த ஜுன் மாதம் 29ஆம் திகதி வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் காணமல் போன மோட்டார் சைக்கிள் ஒன்றும் மல்லாவியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரு மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

புடினை சந்திப்பதற்கு முன் பாதுகாப்பு உத்தரவாதத்தை கேட்கும் ஜெலென்ஸ்கி! இடம் இதுவாக இருக்கலாம் News Lankasri

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
