மன்னாரில் இரண்டு வெதுப்பகங்களுக்கு சீல்
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்த இரண்டு வெதுப்பகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு பெற்று மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்றையதினம் (08.11.2024) குறித்த வெதுப்பகங்களுக்கு சீல் வைத்துள்ளனர்.
கடந்த பல மாதங்களாக மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த வெதுப்பகங்கள் தொடர்பில் பரிசோதித்து 12 குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என கடிதம் மூலம் அறிவித்திருந்தனர்.
சுகாதார சீர்கேடுகள்
எனினும், அறிவிப்புக்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வெதுப்பகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதற்குரிய நீதிமன்ற அறிவித்தல் வெதுப்பகங்களின் கதவுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதே போன்று, மன்னார் மாவட்டத்தில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வரும் உணவகங்கள் தொடர்பிலும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
