முல்லைத்தீவில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயம்
முல்லைத்தீவு (Mullaitivu) ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் காட்டுயானை தாக்கியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம், இன்று (08.11.2024) காலை நடைபெற்றுள்ளது.
ஒட்டுசுட்டான் இத்திமடு வீதியில் நேற்று (08.11.2024) காலை 8.30 மணியளவில் வயல் காவலுக்காக மிதிவண்டியில் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த சம்மளங்குளம் பகுதியினை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே யானை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
காட்டு யானை தொல்லை
காயமடைந்த குறித்த விவசாயி ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை நாட்களாக காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது.
ஒட்டுசுட்டான், முத்தையன்கட்டு போன்ற பகுதிகளில் அதிகளவில் காட்டு யானைகளின் நடமாட்டத்தினால் விவசாயிகள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 15 மணி நேரம் முன்

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
