ஆறு துப்பாக்கிகளுடன் இருவர் கைது
ஆறு துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம், கிரானேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோரளயாகம மற்றும் உல்பத்தயாய ஆகிய பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது மேற்படி இருவரும் கிரானேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது
கிரானேகம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து ஒரு வெளிநாட்டுத் துப்பாக்கியும், ஐந்து உள்நாட்டுத் துப்பாக்கிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் 49 மற்றும் 51 வயதுடைய தேவஹுவ மற்றும் தம்புளுஹல்மில்லவெவ ஆகிய பகுதிகளை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் ஆவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிரானேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் கெக்கிராவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
