மட்டக்களப்பில் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது
மட்டக்களப்பு- புதூர் பிரதேசத்தில் ஜஸ் போதை பொருள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (5) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுபற்றி தெரியவருவதாவது, குறித்த பிரதேசத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புபட்ட இரு குழுக்கள் இயங்கி வருவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இருவர் கைது
இதனையடுத்து, போதை ஒழிப்பு ஊழல் ஒழிப்பு பிரிவினர் சம்பவதினமான நேற்று இரவு குறித்த பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபர்கள் உள்ள வீட்டை முற்றுகையிட்டனர்.
இதன்போது, 3100 மில்லிக்கிராம் ஜஸ்போதை பொருளுடன் ஒருவரையும் கனரக கூரிய ஆயுதங்களுடன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் குமார் குழுவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, சந்தேகநபர்கள் பிரதேசத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தி வருபவர்கள் எனவும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |