இரண்டரை கோடி ரூபாய் பெறுமதியான அபூர்வ கல்லுடன் இருவர் கைது
கிண்ணியா பகுதியில் இரண்டரை கோடி ரூபாய் (2.5 கோடி) பெறுமதியான அபூர்வ சுலைமான் கல் (இராவண கல்) ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிண்ணியா மற்றும் மூதூர் பகுதிகளை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் பிறந்தநாள் விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு - சிசிடிவி கமராக்களில் சிக்கிய சந்தேகநபர்
பொலிஸார் விசாரணை
நேற்று (2026.07.23) இராணுவப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கிண்ணியா - கண்டி வீதியில் அமைந்துள்ள புடவைக்கடை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இக்கல் மீட்கப்பட்டதுடன், சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

550 கிராம் நிறை உடைய இந்த கல் 4 அங்குலம் நீளமும், 6 ½ அடி சுற்றளவும் கொண்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் மீட்கப்பட்ட கல்லையும் இன்று ( 24) நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.