வயல்வெளியில் மறைத்து வைக்கப்பட்ட சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது
வயல்வெளியில் மறைத்து வைக்கப்பட்ட கசிப்பு போத்தலுடன் இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றோர வயல்வெளியில் நேற்று(7) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைதான சந்தேக நபர்கள்
கல்முனை விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது சுமார் 23 மற்றும் 26 வயதுடைய வீரமுனை பகுதியை சேர்ந்த சந்தேக நபர்களை 40 000 மில்லி லீட்டர் கசிப்புடன் கைது செய்துள்ளனர்.
கைதான சந்தேக நபர்கள் உட்பட சான்றுப்பொருட்கள் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் கல்முனை விசேட அதிரடிப்படையினர் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர்.
இச்சோதனை நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டி.ஜி.எஸ்.டி சில்வா பணிப்புரைக்கமைய விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri