வவுனியாவில் கட்டுத்துப்பாக்கியுடன் இருவர் கைது
வவுனியாவில் நேற்று மாலை இருவேறு பகுதிகளில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கையின்போது இருவர் கட்டுத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருதோடை, புளியங்குளம் பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கையின் போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட கட்டுத்துப்பாக்கியை கைப்பற்றிய பொலிஸார் 38வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
நீதிமன்ற நடவடிக்கைகள்
இதேவேளை செட்டிகுளம் சின்னத்தம்பனை பகுதி வீடு ஒன்றில் கட்டுத்துப்பாக்கியை மறைத்து வைத்திருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸார் கட்டுத்துப்பாக்கி ஒன்றினையும் 30வயதுடைய சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்
பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.