துப்பாக்கி மற்றும் 96 ரவைகளுடன் இருவர் கைது - பொலிஸார் அதிரடி சோதனை
ஏகே 47 துப்பாக்கி ரவைகள் மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை உடைமையில் வைத்திருந்த இரண்டு பேர் கொடிகாமம் மிருசுவில் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(22.11.2026) இடம்பெற்றுள்ளது.
96 ரவைகள் மீட்பு
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரிடம் கொடிகாமம் பொலிஸார் நேற்று(22) இரவு நடத்திய திடீர் சோதனையின் போதே ஏகே 47 துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 96 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து சந்தேக நபர்களின் வீடுகளில் நடத்தபட்ட சோதனைகளின் போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது.
31 மற்றும் 28 வயதான இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை தொடர்ந்து சந்தேக நபர்களை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த கொடிகாமம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
