அம்பாறையில் போதைப்பொருளுடன் இருவர் கைது!
அம்பாறை- சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வேறு இடங்களில் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊழல் ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு இந்த விசேட சோதனை நடவடிக்கை இன்று(17.11.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கையின் போது முதலாவது சந்தேகநபரான விளினியடி - 08 பிரிவைச் சேர்ந்த 30 வயதுடைய நபரிடமிருந்து 6 கிராம் 074 மில்லிகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக தீவிர விசாரணை
மற்றைய இரண்டாவது சந்தேகநபரான செந்நெல் கிராமம் - 02 பிரிவைச் சேர்ந்த 27 வயதுடைய நபரிடமிருந்து 2 கிராம் 158 மில்லிகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களா அல்லது தனிப்பட்ட பாவனைக்காக வைத்திருந்தார்களா என்பது தொடர்பிலும் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.