திருகோணமலையில் போதைப் பொருளுடன் இருவர் கைது
திருகோணமலை(Trincomalee), குச்சவெளி பகுதியில், குடும்பஸ்தர் இருவர், ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது திருகோணமலை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்றையதினம்(19) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருவர் கைது
சலப்பை ஆறு, சுனாமி வீட்டுத்திட்டப் பகுதியில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து 1.530g ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் வழங்கிய தகவலை அடுத்து, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, நிலாவெளி, இரக்ககண்டி பகுதியில் 5.190g ஹெரோயின் போதைப் பொருளுடன் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைக்காக குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது
இதேவேளை ,ஐஸ் போதைப் பொருளுடன் மல்வத்தை விசேட அதிரடிப் படையினரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சட்ட நடவடிக்கைக்காக நிந்தவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவில் உள்ள புற நகர் பகுதி ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக புதன்கிழமை(19) இரவு நடமாடிய 34 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை சோதனை செய்த விசேட அதிரடிப்படையினர் 2 மில்லி 450 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
இதன் போது நீண்ட காலமாக குறித்த சந்தேக நபர் இப்பகுதியில் இப்போதைப்பொருளை விநியோகித்து வந்துள்ளதுடன் அப்போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த அவுலியா வீதி நிந்தவூர் 23 பிரிவினை சேர்ந்தவர் என்பதுடன் கைதான நிலையில் சான்று பொருட்களுடன் நிந்தவூர் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்: பாறுக் ஷிஹான்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 43 நிமிடங்கள் முன்

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
