டக்ளஸ் கட்சியின் முன்னாள் எம்.பி திலீபனுக்கு பிணை
புதிய இணைப்பு
கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகிய இருவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிதி மோசடி குற்றப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர்களை இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் நிதி மோசடி குற்றப் பிரிவு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவரது பிரத்தியேக செயலாளரும் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிசார் நடவடிக்கை
காசோலை நிதி மோசடி தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனின் பிரத்தியேக செயலாளரை நேற்று(19) மாலை மாவட்ட நிதி மோசடி குற்றப் பிரிவு பொலிசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இன்று (20) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam
