போதைப்பொருள் சோதனையில் இருவர் கைது! இலட்சக்கணக்கான பணம் கைப்பற்றிய பொலிஸார்
நாட்டின் இரு வேறு பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனைகளின் போது, 'ஐஸ்' போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநாகல், தித்தவெல்ல எலஸ்வத்தை பகுதியில் குருநாகல் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், 126 கிராம் 500 மில்லி கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மாஸ்பொத்த பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் தீவிர விசாரணை
இதேவேளை, ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் பாதுக்கை, உடுமுல்ல சந்தியில் சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது, 14 கிராம் 420 மில்லி கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் 37 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 3 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், குருநாகல் மற்றும் பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.